 |
கட்டுரை
விடுமுறை நாட்கள் முஜிப் - அல்கோபர்
மனதுக்குள்
தென்றல் தவழ்ந்து வரும் காற்றலைகளாய்!
வண்ணமயில்கள் தோகை விரித்தாடும் குதூகலமாய்!!
வண்ணமலர்கள் பூத்து குலுங்கும் பூஞ்சோலையாய்!!!
கூக்குரல்கள் செந்தமிழ் ராகங்களாய் பாட்டிசைக்க!
மகிழ்ச்சியெனும் மழைசாரலில் இதமாய் நனைந்து!!
பாலகனாய் கற்பனைகளுடன் இல்லம் போய்சேர!!!
சொந்தபந்தங்கள் நட்புபாராட்ட சிலிர்க்கவைக்கும் தருணங்களாய்!
பாசமலர்கள் அரவணைப்பில் நொடிப்பொழுதில் நாட்பொழுதுகளாய்!!
தமிழரின் பண்பாட்டை பறைசாற்றும் விருந்தோம்பல்களாய்!!!
நண்பர்களின் ஆக்கிரமிப்பில் கண்ணெதிரே நினைவலைகளாய்!
நினைத்தபொழுதில் அங்குமிங்கும் சுற்றி திறியும் சிட்டுகுருவியாய்!!
மழலைகளிடம் மாட்டிகொண்டு விழிபிதுங்கிய நிகழ்வுகளாய்!!!
பொறுப்பின் முக்கியத்துவத்தை பறைசாற்றும் நிமிடங்களாய்!
பிரிவின் மகத்துவத்தை எடுத்துறைக்கும் மெய்சிலிர்ப்புகளாய்!!
சோகத்தின்ஊடே பொறுப்பின் பயணம் தொடர்கிறது!!!
பி.கு.: இந்த தொகுப்பு, சொந்த பந்தங்களை,நண்பர்களை பிரிந்து சவுதியில் வேலையில் இருக்கும் நான் விடுமுறையில் தாயகம் செல்லும்/சென்றிருந்த போது நிகழ்ந்த நிகழ்வுகளின் தாக்கம்.
- முஜிப் அல்கோபர் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|