 |
கட்டுரை
அம்மாவுக்கு.. மாறன்
விட்டுவிட்டு வந்த பிறகும்
விடாமல் துரத்துகிறது
உன் நினைவுகள்
வெட்கமாய் இருக்கிறது
ஒரே வீட்டில்
அந்நியர்களாய் வாழ்ந்தது
உன்னிடம்
சிரிக்கக்கூட
தயங்கிய கொடுமை
எந்த மகனுக்கும்
வரவேண்டாம்
மூட்டு வலிக்குத்
தைலம் தர
தயங்கிய கையிது..
பிஞ்சிலேயே
முறித்திருக்கக் கூடாதா?
புடவை அடியில்
மறைந்து வரும்
வெற்றிலைக்கட்டுகள்
உன்னைச் சேராமலேயே
பழுப்பேறிக்
குப்பையானது
நீ அறியாதது
உறக்கத்திற்கான இரவுகள்
அழுவதற்கென்றானது
உனதகராதியில்
மட்டும்தான்
ஊமைக்காயங்கள்
உண்டென்றாலும்
உயிரோடு எரித்தது
முதியோர் இல்ல
விடைபெறலில்
முதுகில் உணர்ந்த
உன் பார்வைதான்.
- மாறன்
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|