 |
கட்டுரை
அன்புள்ள அப்பாவுக்கு மாறன்
உனது புகைப்படம் பார்த்தே
கழிந்து கொண்டிருக்கிறது
எனது பால்யமும்
அம்மாவின் இளமையும்
ப்ராகரஸ் ரிப்போர்ட்
தரும்போதெல்லாம்
மனதை அரித்தெடுக்கிறது
நீயில்லாமல் போனதன் வெறுமை
தாய் அடிக்கும்போது
தந்தையிடம் தஞ்சமடைகிறான்
எதிர்வீட்டு கண்ணன்
அடிப்பதற்கும் அணைப்பதற்கும்
எனக்கெப்போதும்
உன் துணைவிதான்
விளையாட
வீடு முழுக்க பொம்மைகள் உண்டு
உப்புமூட்டை சுமக்கத்தான்
நீயில்லை
முதல்முறை வந்தபோது
‘யாரும்மா இந்த அங்கிள்?’
என்றதற்காகவா
இன்னும் வராமலிருந்து
வஞ்சம் தீர்க்கிறாய்?
எனக்காக
இல்லாவிட்டாலும் பரவாயில்லை...
துபாய்காரன் மனைவிகளின்
தூக்கம் தின்னும்
ஊரார் சந்தேகங்கள்
அம்மாவைத்
தின்னுவதற்குள்
சீக்கிரம் வந்துவிடு.
- மாறன்
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|