 |
கட்டுரை
விசும்பல் மாறன்
என் விருப்பதை அலைக்கழித்து
வெகு நாட்களுக்குப் பின்
தர இசைந்தாய்
எனக்கு அறிமுகமாவதன் மூலம்
பிறருக்கு அம்பலமாகிவிடும்
அபாயம் குறித்து அஞ்சினாய்
காற்று நாமும்
தனித்திருக்கும் நேரத்தில்
சுற்றும் முற்றும் பார்த்து
கை திணித்துப் பறந்தாய்
அதன்பின்
உன் தொகுப்புக்கும் உனக்கும்
யாதொரு சம்பந்தமும்
இல்லாதவனாகவே
நடந்துகொண்டாய்
பாராட்டை விலக்கும்
முதல் கலைஞனாக
உன்னை தரிசித்தேன்
ஒரு மழை நேரத்து
ஆசுவாசத்தின்போதுதான்
உன் விசும்பல்
‘கடைநிலை ஊழியனுக்குக்
கவிதை ஒரு கேடா’
அன்றைக்குத்
தேநீரை விடவும்
அதிகம் சுட்டது
உன் வார்த்தைகள்தான்
- மாறன்
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|