 |
கட்டுரை
விடையில்லாதவை மாறன்
தெரு நாய்கள் குறித்து
ஏராளமான கேள்விகள்
இருக்கின்றன
இரவில் மட்டுமேன்
அதிகமாய்
குரைக்கின்றன?
அருகே வந்து
முகர்ந்து பார்த்து
என்ன நினைத்து
சமாதானமடைகின்றன?
வண்டியோட்டிகளை
மட்டுமேன்
குறிவைத்துத்
துரத்துகின்றன?
பேயும் பிசாசும்
அவற்றின் கண்களுக்குத்
தெரிவது உண்மையா?
..விடையின்றி தொடரும்
சிந்தனை கத்தரித்து
குரைக்கும் என் வீட்டு நாய்
எதை முடித்து வைக்க
நினைக்கிறது
எனது கேள்விகளையா?
இந்தக் கவிதையையா?
- மாறன் ('இரண்டாவது சந்திப்பு' தொகுப்பிலிருந்து)
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|