 |
கட்டுரை
உணர்வறிதல் மாறன்
அதிகாலை குளிருக்கு
பயந்து
முந்தினநாள் இரவே
போடப்பட்டு விடுகின்றன
மார்கழிக் கோலங்கள்
நைட் ஷிஃப்ட் முடித்து வரும்
என் தொய்வடைந்த
கண்களுக்கு
அவை ஒளிதரத்தக்கவை
நின்று ரசிக்கவிடாமல்
துரத்தும்
தெரு நாய்களுக்குத்
தெரிவதில்லை
வண்ணங்களின் சிறப்பு
இரண்டாமட்டம்
முடிந்து வருபவர்களது
விமர்சனமும்
இங்குதான் கிறுக்கப்படும்
எஞ்சியவற்றைக் காப்பாற்ற
சைக்கிள் தூக்கிச் செல்வேன்
உழைத்த விரல்களை நசுக்காத உணர்வோடு.
- மாறன் ('இரண்டாவது சந்திப்பு' தொகுப்பிலிருந்து)
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|