 |
கட்டுரை
ஒரு காலை வேளையில்.... மலர்விழி இளங்கோவன்
வெய்யோன் விரல்கள்
வீசும் தென்றலைத் தீண்ட...
விடுபட்டு ஓடிய தென்றல்
விழித்தெழு என்று
மரங்களை உலுக்க...
கிளைகளின் கிலுகிலுப்பில்
புல்லினங்கள்
பூபாளம் இசைத்தபடி
ஓய்வெடுத்த சிறகுகளை
உதறிச் சிக்கெடுத்து
உயரே பறக்கும்.!
கூம்பிக் கிடந்த
அரும்பு ஒன்று
விடியலுக்குள்
விரிந்து நிற்கும்
விந்தையை
வியந்து நோக்கும்..
புத்தம் புதிதாய்
துளிர்த்து நிற்கும்
தளிர் இலைகள்!
இப்படி
அற்புத இயற்கையின்
அத்தனை அழகையும்
அதிகாலை வேளையில்
அள்ளிப் பருகும்
அதிகப்பட்ச
ஆசையெல்லாம்
எமக்கில்லை....
அரைக்கோப்பை தேநீரை
ஆறும் முன் பருகிடும்
அற்ப ஆசையைத் தவிர!
- மலர்விழி இளங்கோவன் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|