 |
கட்டுரை
அனைத்தும் நீ மதுமிதா
செல்லப்பெயரிட்டு அழைக்கச் சொன்னாய்
சாளரம் நீ திறந்து வைத்தாய்
காற்றை அனுபவிக்கச் செய்தாய்
புது உலகம் கண்டுகளிக்கவிட்டாய்
எங்கு சென்றாய்
எதிலும் உனைத்தேடிடும்
ஏந்திழை விடுத்து
கண்கள் வேலைநிறுத்தம் செய்கின்றன
செவிகள் செயல்படுவதில்லை
ஐம்புலன்களும் வஞ்சிக்கின்றன
வார்த்தை தவறிவிட்டதாய்
இங்கும் அங்கும் எங்கும்
அனைத்திலும்
அனைத்திலும்
அனைத்திலும் நீ
நீ நீ நீ
மாந்தரின் மகிழ்வை மட்டுமே
மனமகிழ்ந்து விரும்பும் நீ
மனம் விரும்பி
மனம் மகிழ்விக்க
வரும்நாள் எந்நாள் வருமா அப்பொன்னாள்
- மதுமிதா ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|