 |
கட்டுரை
துணையெழுத்தின்றி மதியழகன் சுப்பையா
எப்படியென்றால் என்ன?
இப்படித்தான் என்பது
யாரிட்ட விதி?
எப்படியும் என்பது
எதற்கும் ஒவ்வாது
இப்படியுமில்லாமல்
எப்படியுமில்லாமல்
எப்படித்தான் ????
கட்டுக்குள் அடங்குமா?
அடங்காது
திசைகளை தீர்மானிக்கத்
தெரியும் அதற்கு
தானே எழுதிக் கொள்ளட்டும்
அவரவர் கவிதைகளை
- மதியழகன் சுப்பையா, மும்பை ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|