 |
கவிதை
கருப்பு வெள்ளை லட்சுமிகாந்தன்
நிலாவின் முற்றங்களில்
அம்மா ஊட்டிய
சோற்றுப் பருக்கைகள் காயும்.
விடுமுறை நாட்களில்
தெருவிளக்குகளுக்கும்
அழகுதரும் பிஞ்சுகால்களின்
தடதடக்கும் சப்தங்களில்
பறந்த புழுதி
அது ஒரு காலம்.
பாட்டிகளின்
கதை ஊற்றுக்களை
அடைத்திருக்கின்றன
ஆன்டெனாக் கம்பிகள்
ஏழுமலை, கடல் தாண்டி
கிளிக்குள் இருக்கும்
ராட்ஷசனின் உயிர்
இன்று சேனல்களுக்குள்.
ஒரு குடம் தண்ணியெடுத்து
ஒரு பூ பூத்தது...
ரெண்டு குடம் தண்ணியெடுத்து
ரெண்டு பூ பூத்தது...
பாடல்கள் வற்றிய
குழந்தையின் தோட்டங்களில்
பூக்களே பூப்பதில்லை...
- லட்சுமிகாந்தன்
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|