 |
கவிதை
அவரவர் வானம் அவரவர் காற்று அ. லட்சுமிகாந்தன்
தாங்கும் அன்பிற்கும்
ஏங்கும் அன்பிற்கும்
வித்தியாசம் தெரியவில்லை.
எல்லோராலும்
உணரப்பட்டும்,
அலட்சிப்படுத்தப்படுகிறது
உண்மை.
ஊனமாகிப் போனவர்களின்
வாழ்வு வாழ்கிறோம்
நாம்.
செயல் திறனற்ற
உறுப்புகளைக் கொண்டு
தனக்குத் தானே
சுமையாகிப் போன சோகம்
நிகழ வேண்டாம் யாருக்கும்...
பிரியங்களை உதாசீனப்படுத்திவிட்டு
கருணைக்காக கையேந்துகிறோம்
எந்த திசையில் நின்றாலும்
அவரவர்க்கு
அவரவர் வானம்
அவரவர் காற்று.
- அ. லட்சுமிகாந்தன்
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|