 |
கவிதை
நிலை குட்டி செல்வன்
தொடர்ந்து பேசுவதற்கு
ஒன்றுமில்லையெனினும்
உனது மௌனம் தருகின்றது
தாங்க முடியாத வலிகளை
நீளும் நிசப்தமுடைத்து
இயல்பாகக் கேட்கின்றாய்
இந்நாட்களில் ஏன் எப்பொழுதும்
அமைதியாகவே இருக்கின்றாயென
உன்னிடம் பதிலென்று சொல்ல
ஏதுமிருப்பதில்லை
நிலையில்லாத கண்ணாடியில்
பிம்பங்கள் சரியாக விழுவதில்லைதான்
சருகெனத் தூக்கி தூர வீசினாலும்
உன் கதவுகளைச் சட்டென்று மூடிவிட்டாலும்
திரும்ப உன் கால்சுற்றியே வருவேனென்றும்
உன்னைவிட்டால் எனக்கு உறவென்று
வேறு எவருமில்லையெனவும்
உன் நம்பிக்கைகள் வலிதாக உருகியிருப்பது
என் பிரியங்களால் மட்டுமே
எனக்குத் தெரியும்
நீ பெற்றுக்கொள்ளத் தயங்கினாலும்
அதை ஒருபோதும் வெறுக்கமாட்டாயென
ஆயினும்
எனதனுமானங்கள் தேய்ந்து
காணாமல் போகுமொரு தினத்தில்
என் கூட்டை உடைத்து
எங்கோ பறந்துவிடப் போகிறேன்
- குட்டி செல்வன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|