 |
கவிதை
பறிக்காமல் விட்ட அரளிப்பூ விதை
குமரேஷ் பொறையார்
உன் விரல்களாய் என் கன்னங்களை
வருடுகின்றன என் வீட்டு மாமரக்கொழுந்துகள்
உன் இதழ்களாய் பூத்து சிரிக்கின்றன
என் வீட்டு செம்பருத்திகள்
குளித்து முடித்து ஈரம் சொட்டும் உன்
கூந்தலாய்ப் பொழிகிறது கார்முகில்
மேகம் கலைந்த வானத்தில்
உன் முகமாய் சிரிக்கிறது நிலா
பறிக்காமல் விட்ட அரளிப் பூ விதையாய்
கசக்கிறது உன் பிரிவு
- குமரேஷ் பொறையார் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|