 |
கட்டுரை
சிற்பி! கோட்டை பிரபு
மனதில் ஒளிர்ந்ததை
நினைவில் ஒழுங்கிடுவாய்!
சலனமற்ற நீரோடையின்
ஓட்டத்தை ஒத்தே உன் தழுவல்கள்
விரல்களின் விருந்தாளியின்
உன்னதத்தை உணர்ந்திட்டாய்
ஆத்திகத்தின் ஆணிவேரை
அவதரிக்கச் செய்திட்டாய்
உன்னால் மட்டும் முடிகிறது
ஒழுங்கற்றதை ஓவியமாக்க
மனவிழியில் சிற்பத்தின் சிற்பம்
நிலைத்திருக்க,
தேவையற்றன சிதறடிப்பாய்
கணநேர வேண்டுதலில்
ஓயாத எண்ண அலைகள்,
சில நொடியும் பிசகாத
சிந்தையினை கொணர்ந்திட்டாய்!
கடுந்தவம் செய்திட்டும்
கண்டிராத உண்மைதனை-உன்
கலை நயத்தில் எமை மறந்து
கண்டுணர்ந்தேன் உண்மையிலே!!
- கோட்டை பிரபு ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|