 |
கவிதை
மீளாத்துயில்... கிறுக்கன்
பிளிருகின்ற சத்தம் கேட்டால்
துவண்டு போன வாழ்கையின்
கடைசி சொட்டினிலே
கை கழுவ முனைந்தேன்!
கை கழுவப்பட்டேன்!
நிராகரிப்பெனும் புதுக்குரல்
ஓங்கி ஒலித்து கொண்டிருந்தது!
நான் கையிரண்டை கன்னம் வைத்து
பீதியின் உச்சத்திலே
திரும்பி திரும்பி பார்க்கிறேன்!
காற்றும் அமைதியும்
போர் புரிந்து கொண்டிருந்தன!
ஒரு போர் வீரனாய்
என் கரங்களால்
காற்றை கிழிக்க முயன்றேன்...
வார்த்தைகளால்
அமைதியை உடைக்க முயன்றேன்!
அறையின் வெளியே
ஒரு நாற்காலியில்
கால் மீது காலிட்டு
எருமைக்கு தடவி கொண்டிருந்தான்
எமன்!?
என் துண்டுகளும்
சட்டைகளும்
உள்ளாடைகளும் உரிக்கப்பட்டு
தோலாடை உடுத்தி
என்னை நானே புணர்ந்து கொண்டிருக்கிறேன்!
ஒரு சிறு மகிழ்ச்சிக்காக!
புணர்ச்சியின் முடிவாய்
மரணகுழந்தை!
தொட்டிலில் ஆடி கொண்டே
உறங்கி போனது!
என்னோடு...
- கிறுக்கன் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|