 |
கவிதை
ப.கவிதா குமார் கவிதைகள்.
என்செய்வது?
முட்களை
முனைமழுக்குவதால்
காயமின்றி
தப்பிவிடும் ரோஜா என்றால்
பறித்தெறியும் காற்றை
என் செய்வது?
அபஸ்வர சங்கீதம்
வீட்டின் முற்றத்தில்
கிளைவிட்டு நிற்கும்
புங்கை மரக்கிளைகளில்
முருங்கை மரங்களில்
வந்தமரும் குருவிகளின்
சங்கீதம் குதூகலப்படுத்தும்.
இடை இடையே
இழவுக்கிளியின்
இடைவிடா ஆரோகணம்.
அந்திம கால மரங்களின்
இலையுதிர் கால
இலைகள் இரண்டு
என்னருகே
இளைப்பாறும் போது
எல்லாக்குருவிகளின்
சங்கீதமும் எனை வதைக்கும்.
ஒளி திருடுபோவதை
என் கஷ்டம் கண்டு
கழிவிரக்கம் கொண்டு
காட்சி தந்தாலும்
கற்பூர ஆராதனை மட்டும்
செய்ய மாட்டேன் கடவுளே. . .
காற்றால்
ஒளிதிருடுபோவதை
காலத்தாலும்
அனுமதியாதென் நெஞ்சு.
- ப.கவிதா குமார் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|