 |
கட்டுரை
ஆப்கான் முதல் ஆழப்புழா வரை.. கெ.கார்த்திக் சுப்புராஜ்.
தாலிபான் கோரிக்கை,
ஆப்கான் மறுப்பு,
மாண்டது - ஓர் இந்திய உயிர்!
குழந்தை பிறந்தது,
மழை பெய்தது,
நகை வாங்கியது
காய்ச்சல் அடித்தது,
சினிமா பார்த்தது,
தீபாவளிக்கு வாழ்த்தியது - என
அனைத்தையும் தொலைபேசியிலே
கேட்டுச் சலித்துப்போன - அந்த குடும்பத்திற்கு,
இறந்த செய்தி மட்டும்,
இந்திய தொலைக்காட்சிகளில் - முதன்முறையாக!!!!
எட்டு மணி செய்தியின்போது
‘உச்‘ மட்டும் கொட்டிவிட்டு,
ஒன்பதுமணி நாடகத்திற்கு,
கண்ணீர்விட தயாராகிவிட்டனர் - மக்கள்!!!
தந்தை புகைப்படம்
டிவியில் பார்த்ததும்,
கைத்தட்டி ரசிக்கும்
அந்த பிஞ்சுக்குழந்தை!!
ரசிக்கட்டும் - தலைப்புச்செய்தி,
Flash news, Live coverage - என
இந்த பரபரப்பும், நாளைய
போட்டியில் சச்சின் சதமடித்தால்,
பறந்துவிடும்!!!
உலகநாடுகளே!!!
நிவாரணமும், கண்டனங்களும்
வேண்டாம்,
“அந்நிய டாலருக்கான,
இன்றைய இந்திய மதிப்பு,
4.33 உயிர்கள்” - என
நாளைய வர்த்தக செய்திகள்
வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்!!!.
- கெ.கார்த்திக் சுப்புராஜ் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|