 |
கவிதை
மயிலிறகு கார்த்திக் பிரபு
1.
கடன் அன்பை முறிக்குமாம்
எங்கே திருப்பிக் கொடு பார்க்கலாம்
நான் கொடுத்த முத்தத்தை
2.
எல்லாருடன் சேர்ந்து ஆடும்
கண்ணாமூச்சி ஆட்டத்தில்
நானும் நீயும் மட்டும் எப்போதும்
ஒன்றாய் ஒளிந்து கொள்ளும்
அந்த நெற்குதிரின் மறைவில்
இன்று என் அக்கா குழந்தைகள் ஒளிந்து
விளையாடும்போது நின்று ரசிக்காமல்
போக முடியவில்லை என்னால்
3.
சிறு வயதில் நீ எனக்குப் பரிசளித்த
ஒரு அழகிய மயிலிறகை இன்னும் பத்திரமாய்
வைத்திருக்கிறேன்
என்றெனக்கு திருப்பித் தருகிறாய்
நீ எனக்கு கிணற்றடியில் கொடுத்த முத்தத்தை
இன்னும் நான் பத்திரமாக வைத்திருக்கிறேனென
திருப்பித் தர முயன்றபோது ஓடி ஒளிகிறாய்
என்னடி நியாயம் இது??
4.
கண்களால் வலைவிரித்து
எனைக் கவர சில முத்தங்களையும்
ஆங்காங்கே தூவி விட்டுக் காத்திருக்கிறாய்
முத்தங்களுக்காக ஆசைப்பட்டு
வேண்டுமென்றே மாட்டிக் கொள்கிறேன்
மாட்டிக் கொள்வதும் சுகம் தான் காதலில்
- கார்த்திக் பிரபு ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|