 |
கவிதை
உங்களிடம் பேச நேரமில்லை கார்த்திக் பிரபு
சகபையன்கள் உச்சி எடுத்து
தலை வாரியிருக்க
பலமுறை என் சுருள் முடியை நேராக்க
முயன்றிருக்கிறேன்
என் நண்பர் கூட்டம்
சுஜாதாவைப் படிக்க
அவசரமாக அம்புலிமாமாவையும் கோகுலத்தையும்
விசிறி எறிந்திருக்கிறேன்
விடலை பருவத்தில்
சகாக்கள் புகைப்பிடிக்கக் கண்டு
நானும் உள்ளிழுத்து தொண்டை வலிக்க
இருமியிருக்கிறேன்
ஆளுக்கொரு பெண்ணைத்
தேடிப்பிடித்துக் காதலிக்க
கிறுக்குத்தனமாய் கடிதம் கொடுத்து நண்பியை
இழந்திருக்கிறேன்
இன்று இப்போது வந்து விட்டுப் போன
நண்பன் பைக் வாங்கியிருப்பதாகச் சொல்ல
வேகமாக லோன் போடப் போகிறேன்
வங்கிக்கு
வழிவிடுங்கள் எனக்கு
உங்களிடம் பேச நேரமில்லை...!
- கார்த்திக் பிரபு ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|