 |
கவிதை
சீருடை நாட்கள் முத்தாசென் கண்ணா
அருணாக்கயிறில் குடித்தனம் நடத்திய
அந்த அழுக்கு அரைக்கால் டிரவுசரின்
வாசனையை உணர முடிகிறது...
என் பழைய பள்ளிக் கட்டடத்தை
கடந்து போக நேர்கையில்
பலமுறை என் தத்தா செத்துப்போனதாய்
அறிவித்த விடுமுறை விண்ணப்பங்களையும்
ஆரஞ்சு மிட்டைக்கான ஆர்வக் கோளாறில்
தேசியக் கொடியைத் தலைகீழாக
குண்டூசியில் ஏற்றிய
ஆகஸ்டு பதினைந்துகளையும்
எல்லப்பனின் தகர டப்பாவை
மறைத்து வைத்ததனால் ஏற்பபட்ட மனஸ்தாபத்தில்
இன்று வரை பேசாமலிருப்பதும்
கூட்டாஞ்சோத்துக்காக சுள்ளிகள் பொறுக்கிய
சொப்பு விளையாட்டுகளையும்
அசைபோடத் தோன்றுகிறது...
"மௌஸ் ஹேங்க் ஆயிடிச்சி டாடி"
என்கிற என் மகனின் குரலால்...
- முத்தாசென் கண்ணா ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|