 |
கட்டுரை
தெருவிளையாடல் கதிர்மொழி
ஒரு மனைவிக்கே இன்று
பெற்றோர் முதியோர் இல்லத்தில்.
சிவனும் பார்வதியும்
எந்த...?
எரித்து... எரித்தே...
எரிந்து... எரிந்தே...
பழுதானது
அவனது நெற்றிக்கண்.
சரிபாதி வேண்டுமென்றே
வள்ளி, தெய்வானை
சண்டையில்
முருகனின் முகம்
முழுதாய் மறைந்துபோனது.
முருகனின் பிள்ளைகள்
கான்வென்ட்டில் படிக்க,
தமிழைத் தவிர
சொல்லித் தந்த மொழிகளில் குழம்பி
முருகன் புரியாத மொழியில்
பிதற்றிக் கொண்டிருக்கிறான்.
எந்த வீடு யாருக்கென்று
நீதிமன்ற வாசலில் - தினமும்
காத்துக் கிடக்கின்றனர்
வள்ளியும், தெய்வானையும்.
வாய்தா வாங்கியே
வழக்கைப்போல வயதாகிவிடுகிறது
அவர்களுக்கும்.
எல்லா வீடும் சொந்தமாகிறது
வக்கீலுக்கு.
இருவரின் மகன்களும்
முருகன் வேலினைbr>
எடுத்துக் கொண்டு
சண்டையின்றி செல்கின்றனர்
அடகுக் கடையை நோக்கி...
- கதிர்மொழி
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|