 |
கட்டுரை
திருவோ(ட்)டு கதிர்மொழி
பிச்சைக்காரர்கள்..
பெரும்பாலும் நிறுத்தங்களிலேயே
பயணம் செய்பவர்கள்.
கடன் அன்பை முறிக்கும்
என்பதற்காகவே
கடன் வாங்கா கண்ணியக்காரர்கள்.
உள்ளே நாம்
அழைத்துப் போட்டால்
அடியார்கள்.
வெளியே நம்மை
அழைத்துக் கேட்டால்
பிச்சைக்காரர்கள்.
நாகரிகம் வளர்ந்தே இருக்கிறது
ஆடை கொண்ட
கூட்டிற்கு மரியாதையில்லை.
ஒன்றுமில்லா ஒட்டிற்கு
மரியாதை...
‘திரு’வோடு என்று!
சேரியில்
அறுவடை செய்ததை
மாளிகையில்
பரிமாறுகின்றனர்.
தேர்தலில் மட்டும்
தனித்தனியாகப் போடுகிறோம்
பிச்சையை!
ஒன்றாகத் தருகிறார்கள்
திருவோட்டை!
- கதிர்மொழி
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|