 |
கவிதை
தன்னை மறைத்துக் கொண்ட நிர்வாணம் அத்திவெட்டி ஜோதிபாரதி
வெள்ளையைப் பார்த்து
வெளிரிப் போனது
தன் நிறம் மறந்து
மஞ்சளைப் பார்த்து
மறைத்துக் கொண்டது -தன்
மகிமையை
கறுப்பைப் பார்த்து
கவிழ்ந்து விட்டது
கடைச் சரக்காகி
சாயம் வெளுத்துக்கொண்டு
மகிழ்ந்திருந்தது
தன்னையே மாற்றிக் கொண்டு
சமூகப் பண்பாடு மறந்த
மாந்தளிர்...!
- அத்திவெட்டி ஜோதிபாரதி([email protected] )
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|