 |
கட்டுரை
இரவுகளில் அழுபவன்
ம.ஜோசப்
முதன் முதலில்,
குழந்தையாய் இருந்தபோது,
அண்ணன் வேறு ஊருக்கு
படிக்கச் சென்ற அன்றைய
இரவுதான் அவன்
ஜெபத்தினூடே அழுதான்,
எல்லாரும் உறங்கிய பின்.
அடுத்த நாள் இரவும்
அதேபோல் அழுதபோது,
உறங்காத இரவுகளிலேயே
வாழ்வை கழித்த,
அப்பா அதட்டினார்.
சத்தம் வராமலே
அழப் பழகினான் அன்றிலிருந்து.
காலங்கள் செல்ல, செல்ல
அது ஒரு தீய ஆவியைப் போல
அவனைப் பிடித்துக் கொண்டது.
அப்பா இறந்தபோது,
குழந்தை பிறந்தவுடன் இறந்தபோது,
தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்று,
எதிலும் இடம் கிடைக்காதபோது,
இப்படி காலம் முழுதும்,
பல காரணங்களுக்காக
இரவுகளில் அழுபவன் அவன்.
அவள் மனைவியும்
இரவுகளில் அழுபவள்தானென,
கண்டு கொண்டான், பிறிதொரு நாள்.
அவர்களைப் போல,
இரவுகளில் அழுபவர்கள் பலர்
இருக்கக்கூடும் என,
அவன் நினைக்கலானான்.
அமைதியான இரவுகளில்,
வெளியெங்கும் கேட்கும்
மிக மெல்லிய விசும்பல்களால்
ஆனதுதானோ இவ்வுலகு.
- ம.ஜோசப் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|