 |
கவிதை
காத்திருக்கிறேன் காதலுக்காக... த.ஜெகன்
அலை நீ...
நான்
வரவேற்கும் கரையா?
வழியனுப்பும் கடலா?
தமிழ் நீ...
நான்
இலக்கியக் குறிப்பா?
இலக்கணப் பிழையா?
நெருப்பு நீ...
நான்
ஒளிரும் விளக்கா?
உருகும் மெழுகா?
கவிதை நீ...
நான்
ஆச்சர்யக் குறியா?
அச்சுப் பிழையா?
காற்று நீ...
நான்
பாடும் புல்லாங்குழலா?
பறக்கும் பூவின்மடலா?
மனசு நீ...
நான்
வெட்கமா?
வேதனையா?
தவம் நீ...
நான்
வரமா?
சாபமா?
கண்கள் நீ...
நான்
கனவா?
கண்ணீரா?
காதல் தேசம் நீ...
நான்
அரசனா?
அகதியா?
- த.ஜெகன் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|