 |
கவிதை
வெட்கக் கேடு கே.அய்யப்ப பணிக்கர்
எப்போதும்
ராத்திரியில்
அடுப்படியில்
கொஞ்சமாவது சாதம்
வையுங்கள்.
ஒருவேளை திருடன் வந்தால்
அவனுக்கு பசி எடுத்தால்
சாதம் இல்லையென்றால்
அவன்
ஆத்திரப்பட்டு
கோபப்பட்டு
ஒன்றும் திருடாமல்
போய்விட்டால்
அது
வெட்கக்கேடில்லையா
நமக்கு?
- மலையாளத்தில்: டாக்டர் கே.அய்யப்ப பணிக்கர்
தமிழில்: மு.குருமூர்த்தி (([email protected]))
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|