 |
கட்டுரை
தூண்டில் முள் கோவி. லெனின்
மீன்களுக்கு குளிராது
என்பவர்கள்
குளம் குறித்து
அறியாதவர்களாய்
இருக்கக்கூடும்.
அல்லி மொட்டுக்கள்
நட்டுக் குத்தாய் நிற்கும்
குளத்தில்
தாய் விரலால்
தன் குஞ்சுகளோடு
நீரின் மேல்மட்டத்தில்
நீந்துவதைப்
பார்த்திருக்கிறேன்
மதிய வெயில்
பொழுதுகளில்.
காறித் துப்பும் எச்சிலை
தேடி வந்து கவ்வும்
கெண்டையும் சிலேப்பியும்
தூர் வாராத குளத்தின்
துப்புரவுப் பணியாளர்கள்.
வெட்டுப் புண்ணில்
மீன் கடித்தால்
சட்டென ஆறிடும்னு
யாரோ சொல்ல
குளத்தில் இறங்கிய
என்னை
கடித்ததென்னவோ
தண்ணிப் பாம்பு.
கடல் மீனைவிட
கவிச்சடித்தாலும்
குளத்தில் பிடிக்கும்
நாட்டு மீன் ருசிக்குத்தான்
பழக்கப்பட்டிருக்கிறது
நாக்கு.
கெளுத்தி மினுக்காக
குளத்தில் தூண்டில்
போட்டு
காத்திருந்தபோது
குளத்தின்
தூண்டில் முள்ளில்
சிக்கிக்கொண்டுவிட்டது
மனசு
- கோவி. லெனின்([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|