 |
கட்டுரை
பெயர் கோவி. லெனின்
பார்த்த நொடியில்
இவருக்கு இன்ன
பெயர்தானென
யூகித்தறிவதில்லை
யாரும்
அறிமுகமாகும் மனிதரின்
பெயர்
உங்களுக்குள்
ஏற்படுத்தக்கூடும்
விருப்பத்தையோ
வெறுப்பினையோ
மதம் சார்ந்து
மண் சார்ந்து
இனம் சார்ந்து
எதோ ஒன்றின்
வெளிப்பாடாய்
அமையும் பெயர்கள்
ஏராளம்
புனைப் பெயரோ
எனத் தோற்றமளிக்கும்
நிஜப் பெயர்களும்
உண்டு.
பூனைக்குட்டிகளின்
சத்தம்போல்
உச்சரிக்கப்படும்
சில
புனைப்பெயர்களைவிட
பெற்றோர் வைத்த
பெயரில்
உயிர்ப்பு தொனிக்கிறது.
வைத்த
பெயர்களைவிடவும்
சிலரது பட்டப்
பெயர்கள்தான்
சட்டென
அடையாளம்காட்டும்.
எதிர்பாராமல் வந்து
ஒட்டிக்கொண்டு
பிரபலப்படுத்தவோ
படாதபாடுத்தவோ
செய்துவிடும்
சில பெயர்கள்.
என் பெயரோ
உங்கள் பெயரோ
அவர் பெயரோ...
பொதுவாக சூட்டப்படும்
“பிணம்” என்ற பெயர்
ஒருநாளில்.
- கோவி. லெனின்([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|