 |
கட்டுரை
கொன்றால் பாவம் கோவி. லெனின்
அரிசி குருணையைக்
கொத்திக் கொண்டிருந்த
சேவலுக்குத் தெரியாது
இதுதான் தனது
கடைசி இரவென்று
அதிகாலையில்
அது கூவியபிறகுதான்
தூக்கம் கலைந்தோம்
விருந்து தயாரிப்பதற்காக
கத்திக் கீறலில்
ரத்தம் பீறிட்டபோது
முனகி அடங்கியது
அதன் உயிரின் குரல்
அறுத்துச் சிதைத்தபோது
பதைபதைத்த மனது
கொதித்த குழம்பு
வாசனையில்
அடங்கிவிட்டது.
- கோவி. லெனின்([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|