 |
கட்டுரை
லட்சுமிகள் கோவி. லெனின்
கலியபெருமாள் வீட்டில்
இரண்டு லட்சுமிகள்
பட்டுப்புடவை
வைரத் தோடு
வெள்ளிக்குடம்... ...
சேமித்து வைத்தார்
ஒரு லட்சுமிக்கு.
புண்ணாக்கு
பருத்திக்கொட்டை
வைக்கோல் போர்... ...
செலவழித்தார்
இன்னொரு லட்சுமிக்கு.
நாள் நட்சத்திரம் பார்த்து
கட்டிக் கொடுத்தார்
ஒரு லட்சுமியை.
வேலையாளைக்
கூப்பிட்டு
காளைக்கு
ஒட்டிப் போகச் சொன்னார்
இன்னொரு லட்சுமியை.
இரண்டு லட்சுமிகளுக்கும்
தலைப்பிரசவம்
ஒரே நேரத்தில்.
ஒரு லட்சுமிக்கு
பையன் பிறந்தான்.
இன்னொரு லட்சுமிக்கு
கிடெரிக் கன்று.
பையனைப் பெற்ற
லட்சுமிக்கு
பிரசவ செலவு
பத்தாயிரம் என்றாலும்
பால் கொடுப்பதென்னவோ
பத்துபைசா
செலவில்லாமல்
கிடேரியை ஈன்ற
லட்சுமிதான்.
- கோவி. லெனின்([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|