|
கவிதை
ஒரு நம்பிக்கையின் கிறுக்கல்கள்
கோகுலன்
எல்லாம் முடிந்ததென நீ
மொழிபுரியாத தேசத்தின்
மலையின் அப்புறத்திலான
தனித்த வீட்டில் மீண்டும் ஏகினாய்
ஆர்ப்பரித்தபடியே
கைபற்றிவரும் குழந்தைபோலான
நேற்றைய நினைவுகளை
உதறி நடக்க எனக்குத் திராணியில்லை
நீ முதன்முதலாய் மீட்டிவிட்ட
என் நரம்பு மெல்லிசை பரப்பி
அதிர்ந்துகொண்டேயிருக்க
நினைவின் திசைகளிலெல்லாம்
பிரவாகமெடுக்கும்
உன் பிரியத்தின் கூறுகளை
ஒவ்வொன்றாய் அச்சுக்கோர்க்கிறேன்
இன்று உணர்வற்றுக்கிடப்பினும்
நாளைய உயிர்த்தெழலில்
நம்பிக்கை எனக்கு!
- கோகுலன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
|
|