 |
கவிதை
ஒரு காதல் கடிதம் ....! மட்டுவில் ஞானக்குமாரன்
என் காதலையும்
கவலையையும்
சொல்லிவிட முடியாத அளவுக்கு
காவல் அதிகம்
என்பதால்
என் கவிதைகள் கூட
பர்தா அணிகின்றன.....
உனது மணம்
நம்மிலிருந்து உன்னை பிரித்துவிட்டதால்
உன்னை நான்
காணமுடியாது என்பது உறுதியாகிவிட்டது.
உன் பெயரை
நான் உச்சரிக்கும் போதெல்லாம்
யானையின் பிளிறல் கேட்ட
நாகம் போலவே
நடுங்குகிறார்கள்; ....!
நெருப்பை
விழுங்கிவிட்டவளின் நிலையில்
நான்
மெல்லவும் முடியாமல் வெளியே
தள்ளவும் முடியாமல் .....
தாஜ்மகால் தகர்ந்தாலும் கூட
காதல் அழியாது...?
கவலையைப்
புனைய உதடுகள் காத்திருக்கிறது
ஆனால்
வார்த்தைகளுக்குத்தான் நடுக்கம்....
கூனிக்குறுகி
தலை கவிழ்ந்து
கை காட்டுபவனுக்கெல்லாம்
கழுத்து நீட்ட
முடியாமல்
தன்மானம் தடுக்கிறது..
இருந்த போதும்
வார்த்தைகளுக்குத்தான் நடுக்கம்
அவை
பர்தாவை அணிந்து கொள்கின்றன...
- மட்டுவில் ஞானக்குமாரன் (யேர்மனி) ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|