 |
கவிதை
மாநகர மனிதன் கீதாஞ்சலி ப்ரியதர்சினி
அலுவலகம் மாறி இங்கு வந்த பிறகு
அதை நீ எப்படி உணர்ந்தாய், தினமும்
மதிய உணவு வேளையில் வித்தியாசமாய்
கலந்து கசியும் சிரிப்பும், அழுகையும்
உன்னிடமும் எப்படி அருகருகே அமர்ந்தன.
உன் ப்யூச்சருக்கு நல்லது என்பவரை மனைவியின்
வெண்டைக்காய் பொரியலுக்கு அடிமையாக்கிவிடு,நம்
பெண்கள் முகத்தை அணிவதை விட செல்லப்
பெயரை பெரும்பாலும் அணிந்துகொள்வதே அதிகம்
என்பதை நான் வெளியே சொல்லமாட்டேன்.
வெள்ளிக்கிழமை மாலை ஸ்டிக்கர் பொட்டுக்களை
மறைக்கும் விபூதி, குங்கும வாழ்வு உன்னுடையது.
உபயோகித்த பழைய வண்டி அலுவலகத்துக்கு
மிக்க நல்லது. இல்லையேல் காக்கைகள்
எச்சமிட வேறு இடம் சென்று விடும்.
வின்டர் சீசன் முடிந்தவுடன் வேறு இடம் சென்று
விடுவேன் என்பவரிடம் என்ன பேசுவது....
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|