 |
கவிதை
இடையில் ஒரு கேள்வி
மணக்கும் ஜவ்வாது உன்னிடம்
குளிப்பாட்டி தினமும்
மணமூட்டுகிறாய் எனக்கு
புரட்டும் குடலை
அவன் புகையிலை நாற்றம்
போவேன் அவனுள்தான் ஆனாலும்
மருளாட
கல்லைச் சுமந்தென்னை
கடவுளாய் வடித்தவன்
உளிப்பட்ட காயம் சொட்டிய
ஒரு சொட்டு ரத்தத்தில்
உயிர்தந்தவன் மட்டுமல்ல
உழைத்து உண்பவன்
நல்லவன் அவன் என்பதாலும்
“பகவானே அப்ப நான்?”
நல்லா வந்துடும் ஆமா
புடுங்காம போயிடு வாய
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|