 |
கட்டுரை
தண்டம் பூங்காற்று தனசேகர்
சிவகாசி குழந்தைகளையும்
மறக்க வைத்து
என்னை முதன் முதலில்
தீபாவளி அன்று
பட்டாசு
வெடிக்க வைத்தாய்
நீர் வாழ்க!
இரண்டாயிரம் ஆண்டுகளாய்
சுத்தமற்றிருப்பதால்
நீ தீண்டாத
நந்தனின் குமாரர்களுக்கு
பூணூல்களில் பூசியுள்ள
காம நெய்யின்
துர் நாற்றத்தை
முகர வைத்தாய்
நீர் வாழ்க!
கணவனை
இழந்த, பிரிந்த
பெண் பாலினர்
மடங்களுக்கு வருதல்
மடத்தனமென
‘உஷா’ர் படுத்தினாய்
நீர் வாழ்க!
எங்கள்
ஈரோட்டுக் கிழவனின்
மூச்சுக் காற்றிற்கும் கூட
‘அபச்சாரம்’ அருளிய
நாவுகளிலும்
நாத்திகம் நுழைத்தாய்
நீர் வாழ்க!
என்றும் கொல்லாத
கடவுள்கள் மத்தியில்
நின்று கொன்ற
அரசுக்கும்...
நினது செல்லிடப்பேசிக்கும்...
ஒரு வாழ்க!
ஒரு வழியாய்
கடவுள்களை
அநாதை இல்லத்திற்கு
அனுப்பிவைத்தாய்
நீர் வாழ்க...
இனி மடத்தில்
தண்டத்துடன்
தண்டமாக.
- பூங்காற்று தனசேகர்
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|