 |
கட்டுரை
நினைவுகள் சின்னபாரதி
மனத்தாயின் மழலைகள்
எல்லை தாண்டி பிரவேசிக்கும்
அடக்கமாகவும்
அத்துமீறியும்
மனம் குரங்கல்ல
மனம் ஒரு காற்று
தென்றலாகவும்
புயலாகவும்
வாயுமண்டலம் தாண்டியும்
வாழும்
நினைவுகள் படிவுகளை
மனத்தாயிடமிட்டே! முடிகின்றன
சில
மென்மையாகவும்
சில
அழுத்தமாகவும்
இவை
காலந்தாண்டியும் காட்டும்
கண்ணாடி போல
நொடிக்கு நூறாய் வந்தவைகளில்
வாழ்ந்துமிருக்கிறேன்
இறந்துமிருக்கிறேன்.
- சின்னபாரதி ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|