 |
கட்டுரை
காத்திரு மரணத்திற்காய் பாஷா
கரித்துகளாய் காற்றில்
கரையுது காலம்
காத்திருக்கிறாய் எதற்காக
காதல், பாசம்,
நட்பு, பரிவு
அன்பு, ஆதரவு எல்லாம்
நேற்றைய பிணங்களாய்!
அம்மா, அப்பா
மனைவி, மகன்
மாய சொற்களாய்
முன்னிற்கும் உறவுகள்!
முயன்று தேடி
முன்னால் அன்பென்றிருக்கும்
மாய வலையில்
மாட்டவில்லையானால் அவன்
மாயங்கள் அறிவாய்!
அன்பென்றால் அவனொருவனே
அறிவாயெனில் அவனை
அறிந்திட வருவாய்!
அறிந்திட ஆயத்தமென்றால்
அவன் கதவு தட்டும்
முதல் ஒலியாய்
காத்திரு ஒரு மரணத்திற்காய்!
- பாஷா ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|