 |
கவிதை
தாய் மரங்கள் பாலு மணிமாறன்
இம்மரங்கள்
ஊரெல்லாம் கையேந்தி ஒன்றுமற்று
தன் மடியில் தலைசாய்க்கும்
பசித்த ராப்பிச்சைக்காரனின்
எதிர்பார்ப்பற்ற பின்னிரவில்
தாயென நிரப்பலாம்
ஓர் கனி
அல்லது
முக்கியமற்ற அவனின் மரணக்காலையில்
எவரும் வரும் முன்னால் உதிர்க்கலாம்
சில மலர்கள்
அல்லது
தவறி கீழ்விடலாம்
ஒரு சில சருகுகளேனும்
- பாலு மணிமாறன் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|