 |
கவிதை
இனிமேலாவது வாழலாம் பாலகிருஷ்ணன்
நான்
இறந்த பிறகு - என் பிள்ளைகள்
வழக்கு போடுவதற்காய்
ஊருக்கு ஒதுக்குபுறத்தில்
கட்டி முடித்தாகிவிட்டது
ஒரு வீடு
ஊரில்
பிரபலமான ஒருவரின்
மகளுக்கு மாப்பிள்ளையாய்
என் மகன்
100 பவுன் இலவசமாய்
கொடுத்ததால்
சந்தோஷமாய்
என் மகளை
வாங்கிச் சென்றுவிட்டார்
மாப்பிள்ளை
பரந்து கிடக்கும்
என் வீட்டில்
இப்போது
நானும் என் மனைவியும் மட்டும்
காலையில்
காபி கொடுக்கையில்
மெலிதாய் சிரித்தால்
அதே
பழைய புன்னகை
மெதுவாய்
கன்னம் கிள்ளினேன்
அதே
பழைய வெட்கம்
என்னையறியாமல்
உள்ளுக்குள்
ஒரு சந்தோஷம்
இனிமேலாவது
வாழலாம் என்பதில்...
- பாலகிருஷ்ணன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|