 |
கட்டுரை
மேலிருந்து கீழ் பாலசுப்ரமணியன்
வலமும் இடமும் இல்லை
வடக்கு தெற்கு இல்லை
கிழக்கு மேற்கு இல்லை
வழிந்தோடும் நீருக்கு
வழியும் திசையும் திக்கும்
மேலிருந்து கீழே தான்
அறிந்தோர் மனதிலிருந்து
அறியாதோர் நோக்கிப் பாயும்
அருவியாய் அது வீழும் கீழே
பள்ளத்தை நோக்கிப் பாயும்
உள்ளத்து எண்ண அலை போல்
துள்ளும் நீர்த்துளிகள் மின்னும்
அள்ளும் நெஞ்சை அற்புதமாய்
அது கீழ்திசை தோன்றி மேலே
அணையும் ஆதவன் சூட்டிலே
அதிசயமாய் தன் பாதை மாறும்
அது போகும் வானத்து மேகம்
அழையா விருந்தாய் புவிதிரும்பும்
அன்பில் குளிரும் மனம் போல்
அது குளிர்ந்தால் பளிங்கினால்
ஆன பனி வைரமாய் காணும்
அடுத்த நிமிடத்தில் கரையும்
அடுத்தவர் துன்பம் கண்டதும்
சடுதியில் உருகும் மனதாய்
கலங்கிய குட்டை போலும்
களங்கமான குறுகிய மனம்
கலங்கரை விளக்கம் நிற்க
பரந்து விரிந்த சமுத்திரம்
போல் திகழும் சில மனம்
அறிவால் அகிலம் காக்கும்
உப்பும்,சீனியும் நீரில் கரையும்
உயிரில் உறைந்து மறையும்
உடம்புகள் கரையும் கண்ணீரில்!
- பாலசுப்ரமணியன் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|