 |
கவிதை
கானல் நீர் பாலசுப்ரமணியன்
பாவப்பட்ட கிராமத்திலிருந்து
பேருந்தின் மனித நெரிசலில்
பைக்குள் சில ரூபாய்களுடன்
பயணித்து பட்டணம் வந்தவன்
வாயைத் திறக்க விடாத பயம்
வாழ்வின் முதல் வான் பயணம்
ரப்பர் செருப்புகள் கால்களில்
ரகசியமாய் கனவுகள் மனதில்
பாலையில் பலமணி வேலைகள்
பழிவாங்கிட விடியும் காலைகள்
எரிக்கும் கொள்ளி சூரியன்கள்
என்றோ மறைந்த மகிழ்ச்சிகள்
அவன் முகம் காணாது நண்பர்
அறைக்கதவை உடைத்திட்ட
அன்று, உயிர் அற்ற உடலாய்
அமைதி தவழ்ந்தவனாய் அவன்
புழுதிப்புயல் பல தாங்கியவன்
புதுப்பணத்துக்கு ஏங்கியவன்
புறப்பட்டான் பிறந்த ஊருக்கு
புதுவிதமாய்.. படுத்துக்கொண்டு!
- பாலசுப்ரமணியன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|