 |
கட்டுரை
உறவுகளின் சங்கிலி பாலசுப்ரமணியன்
அவர்கள் எனது நண்பர்கள்
அதில் வயதில் கூடியவளை
அந்த குழந்தைகள் அம்மா
என்றழைக்கும், பசிக்கையில்
எதாவது சமைப்பாள், தருவாள்
எப்படி இருக்கிறது என்பாள்
நன்றாகவே, அம்மா செய்ததை
நினைவு படுத்தியது என்பேன்
நான் அதிகபட்ச பாராட்டாய்
பகல் முழுதும் அமர்ந்திருந்து
நகம் கடித்து மிக உழைத்து
அகம் சேரும் மாலை நேரம்
அன்பையும் அதைவிட வாஞ்சை
அக்கறையும் எதிர்பார்த்திருந்து
அப்பா என்றழைத்து ஆசையுடன்
அது வேண்டும் இது வேண்டுமென
அடம் பிடிக்கும் சிறு குழந்தைகள்
அன்னியோன்னியம் வேண்டுமென
அவள், பணம் கட்டிய பந்தயகுதிரை
தவமாய் ஓடிச்செல்லும் அவசரமான
நவ நாகரிக வாழ்வின் கழுத்து டை
இறுக்கத்தின் இடையிலும் எஞ்சி
இருக்கும் அதிசயமான நெருக்கம்
இரவு உணவு சேர்த்த சில நிமிட
தொலைக்காட்சி ரசிப்பின் ஊடாக
தொக்கி நிற்கும் ஒரு குடும்பத்தின்
தொன்மையான உறவுகளின் சங்கிலி!
- பாலசுப்ரமணியன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|