 |
கட்டுரை
நிழலின் அழகு பாலசுப்ரமணியன்
பேராசையினால்
பிரயாசைபடுகிறது
பறக்கும் விட்டில்
பூச்சி.. ஒன்று..
நிழலினை, தன்
நிஜத்தைவிடவும்
பிரம்மாண்டமாய்
நிலை நிறுத்திட
விளக்கை நோக்கி
விரைகின்ற போது
சுவர் முழுவதுமாய்
பரவும் அதன் நிழல்
சுட்டெரியும் அனுபவத்தை
சுகம் போல காட்டுகிறது
புகழ் எனும் நிழல் பார்த்து
அக ஒளிக்கு புறங்காட்டி
நாய் கடித்த எலும்பாய்
நாவிலே சுவைக்கும்
உதிரம் சுண்ட, நரம்பு
தளர, ஜீவனும் உதிர
விளக்கின் சூட்டிலே
விட்டிலாய் கருகிய
நேற்றாகி ஆட்டத்தில்
தோற்றதாகி, எரிமலை
குழம்பான கால வெள்ளத்தில்
சாம்பலாகும் மனிதப்பூச்சியின்
தோற்றமும், மறைவும் கூட பின்
தோன்றும் ஒரு கற்பனையாய்!
- பாலசுப்ரமணியன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|