 |
கட்டுரை
சொற்கண்ணிகள் அழகிய பெரியவன்
சொற் கண்ணிகளால் ஒயாது
வேட்டை நிகழ்த்துபவன் நான்
என் குரலைச் சுமக்க
காற்றும் உண்டு
மலம் அள்ளியதும் மாடறுத்ததுமான
என் தாத்தனின் செயல்களை முன்னிறுத்தி
நீங்களிட்ட பேருண்டெனக்கு
எல்லா வரையறைகளுடனும்தான்
சுழல்கிறது எனக்கான உலகமும்
நாம் சந்தித்துக்கொள்கையில்
விசாரிப்பின் ஆயுதங்களால்
யோனி கிழித்து
உங்களுக்கானதை
இழுத்துக்கிடத்துகின்றீர்கள்
மனத்தைக்கீறி நிகழும்
அப் பேறுகளில்
ஆப்பிரிக்க பெண்ணுடைய
உறுப்பைப்போல்
கிழிக்கப்பட்டும் தைக்கப்பட்டும்
வலிக்கிறதென் மனம்
- அழகிய பெரியவன்
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|