 |
கட்டுரை
இரவின் கூத்து அழகிய பெரியவன்
அவிழ்ந்த கதைச் சுருளாய்
நழுவிப் பிரிகிறது இரவு மனம்
வானும் மண்னும்
உதடுகளாய்ச் சமைந்த
விசும்பின் வாயிலிருந்து உதிர்கின்றன
நட்சத்திர அட்சரங்கள்
கருந்தாள் பரப்பில்
எரிநட்சத்திரங்கள்
சித்திரங்கள் தீற்றுகின்றன
விடிய விடிய ஆடும்
நெடிய கூத்தின் கதையை
கூவிக் கதைக்கிறது இருட்டு
- அழகிய பெரியவன்
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|