 |
கவிதை
சுமை அஸிர்
நான் எதையாவது சுமந்து கொண்டே திரிகிறேன்
அல்லது அல்லது எதையாவது
சுமக்க தேடிக்கொண்டெ திரிகிறேன்
எனது சுமைகள் அதன் நியமங்களை
என்னுடன் பகிர்வதேயில்லை
அல்லது அது பகிர்வதை நான் சட்டை செய்வதேயில்லை
ஒரு கடும் பனிக்காலக்கால
காற்றைப்போல நான் விரும்பா தென்றலை
எனக்காக நான் அழைக்கிறேன்
எனது இறுக்கி மூடப்பட்ட
அறைக்கதவின் இடுக்குகள் வழியே
வழிந்தோடும் தென்றலை
எனது போர்வையால் மூடி வைக்கிறேன்
அது எனது சிக்ரேட் புகைவழியே
தப்பி ஓடுகிறது
எனது மூடப்பட்ட போர்வையின் கனவுகள்
தென்றலை தேடித்திரிகின்றன
பெருமுச்சுகள் படர்ந்த அதன் நூலிழைகள்
அதன் வரம்பு கடந்து எனது கழுத்தை
கிழித்து எனது குருதியை நனைக்கிறது
போர்வைக்குள் புதைந்த எனது இரவை
நான் கவனமாய் சேகரிக்கிறேன்
கனவுகளை மீறி
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|