 |
கட்டுரை
உள்முகம் அன்பாதவன்
என்னுள் என்னைத்தேடி
தொடங்கினேன் ஒரு பயணம்
இவ்வளவு இலகுவான முயற்சியாய்
இல்லையது
பாதைகள் முழுக்க இடைஞ்சல்களும்
தடங்கல்களும்
விலக்கித் தொடர்வது பெரும்பாடாக
கண்டேன் விசித்திரங்களை
விபரீதங்களுங்கூட
அறியா உலகங்களுள் நுழைந்த போதில்
காத்திருந்தன ஆச்சர்யங்கள்; அருவருப்பில்
ஆத்திரமூட்டின சில
ச்சே! இதுவும் நானா
படிமக் கோபுரங்கள் இடிந்து சிதைந்து
கசப்பின் கசகசப்பினூடாக
எப்போதாவது வீழ்ந்து சந்தோஷத் தேந்துளி
இருள் சூழ்ந்த புதுத் தடத்தில்
தொடர்வதென் பெருவழி உள்முகமாய்
சலிப்பில்
திரும்பிவர யத்தனிக்கையில்
என்னைத் தெரிந்த நானின் இருப்பு
எழுந்ததொரு பெருங்கேள்வியாய்
என் முன்.
- அன்பாதவன், மும்பை ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|