 |
கட்டுரை
அண்மை அன்பாதவன்
லேசானத் தூறல் தொடர
இதமான குளிர்ச் சூழல்
முட்புதரின் சங்கீதமாய்
'புல் புல்' சீழ்க்கை
பறக்கும் ஹைக்கூவாய்
தாவித்தாவி ' மணிப் பிளான்ட்டில்'
அமர்ந்து கவிசொல்லும் தேன்சிட்டு
எருக்கஞ்செடி கிளைகளில்
குதூகலிக்கும் குயிலினை
வீட்டெதிர்ச் சேற்றில் புரண்டுறுமும்
பன்றிகளின் குரலிலும் இசையாய்
சுகமாயிருக்கிறது
கண்மூடி கைத் துழாவ
இருக்கிறாய் நீ என்னருகில்
- அன்பாதவன், மும்பை ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|