 |
கட்டுரை
இரண்டாம் தாய் அன்பாதவன்
தேடிக் கொண்டிருக்கிறேன் உன்னில்
தொலைந்துவிட்ட என்னை
நதியில் திளைத்துக்
குளிர்ந்த கூழாங்கல்லாய்
தண்ணென்ற பொழுதுகள்
உன்னோடு கழிபவை
உரையாடலில்லா நாட்களோ
மணல் சுடும் வெறுமை
பரிமாறலில் ஊறுகிற
உற்சாக ஊற்று சட்டென வடியும்
மவுனம்கவிந்த பொழுதுகள்
மனக்குகையில் வரைந்த
என் ஓவியங்களுக்கு
தேர்ந்த ரசிப்பை வழங்குமுன் விழிகள்
பாறையாயிருந்தேன்;
சிற்பமானேனுன் செதுக்கலில்
கைம்மாறுக்கு வாய்ப்பில்லா
கடன் பெற்ற நெஞ்சம்
உன் விசுவரூபத்தின்
முன் வாமனனாய்
தேடிக் கொண்டிருக்கிறேன் உன்னில்
தொலைந்துவிட்ட என்னை.
- அன்பாதவன், மும்பை ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|