 |
கட்டுரை
பாரத்மாதா கீ ஜே... ஆதவன் தீட்சண்யா
வியாழனில் நேர்ப்பட்ட
விண்வெளி வீரனொருவன்
எந்த கிரகமென்றான் ஆங்கிலத்தில்
பூமியென்றதும் பொங்கவிட்டான் அன்பை
நாட்டின் பெயரைச் சொன்னதும்
நாமிருவரும்
ஒரே தாயின் புதல்வர்கள்
என்றான் இந்தியில்
பாராயணம்போல் தனக்குள்ளே
முணங்கிக் கொண்டான்
ஸம்ஸ்கிருதத்திலும்
மாநிலத்தை அறிந்ததும்
ஹோ... நானும் பச்சைத்தமிழன் தான்
ஊரெதுவென்று நெருங்கினான் வாஞ்சையோடு
ஒரே ஊர்க்காரர்களாயிருந்தும்
இத்தனைக்காலமும் சந்திக்காததற்கு
அங்கலாய்த்தபடியே
கீழ்ஸ்தாயில்
வீடு ஊரிலா சேரியிலா என்று
அவனிழுத்த முரட்டுக்கோட்டுக்கு அப்புறத்தே
அம்பேத்கர் நகரென்ற
பதிலோடு நானிருக்க
உரையாடும் பொதுவிசயம்
ஒன்றுமில்லாமற் போனது அவனுக்கு
ஊரென்ற ஒன்று
எனக்கும் சொந்தமாய்
இல்லாதிருப்பதைப்போலவே.
- ஆதவன் தீட்சண்யா ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|